Advertisement

Share On
மாவட்ட செய்திகள்

மாற்றத்தை தீர்மானிக்கும் தேர்தல் - நெல்லையில் தவெக தலைவர் விஜய் பேச்சு

Admin 1 week ago தூத்துக்குடி
இந்த தேர்தல் த.வெ.க மற்றும் திமுக இடையேயான போட்டி - விஜய்
திருநெல்வேலி, ஏப்ரல் 8:

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் இன்று திருநெல்வேலியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் தீவிர அரசியல் கருத்துகளை முன்வைத்தார்.

பாளையங்கோட்டை கே.டி.சி நகர் பகுதிகளில் நடைபெற்ற ரோட்ஷோ மற்றும் பொதுக்கூட்டங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பெண்கள் மற்றும் பொது மக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

பாளையங்கோட்டை பகுதிகளில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, மாற்றத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் என அவர் குறிப்பிட்டார். 

தொடர்ந்து அவர், “இந்த தேர்தல் முக்கியமாக த.வெ.க மற்றும் திமுக இடையேயான போட்டி” என கூறி, நேரடியாக ஆளும் கட்சியை எதிர்த்து சவால் விட்டார். 

அரசின் செயல்பாடுகளை விமர்சித்த அவர், ஊழல், நிர்வாக குறைபாடுகள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பினார். பொதுமக்களுக்கு நியாயமான ஆட்சி தேவை என்றும், மாற்றத்திற்காக வாக்களிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இளைஞர்கள் மற்றும் பெண்கள் தான் அரசியல் மாற்றத்தின் முக்கிய சக்தி எனக் கூறிய விஜய், புதிய தலைமுறை அரசியலில் அதிகமாக ஈடுபட வேண்டும் என அழைப்பு விடுத்தார். மேலும், மக்கள் நலன், வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் சமூக நீதி ஆகியவை தனது அரசியல் நோக்கங்களில் முக்கியமானவை என தெரிவித்தார்.

அவரது உரையில், “இது ஒரு அதிசயமான தேர்தல்” எனக் குறிப்பிட்டு, மக்கள் தீர்மானமே தமிழகத்தின் எதிர்காலத்தை மாற்றும் என அவர் கூறினார். 

விஜயின் வருகையையொட்டி நெல்லை முழுவதும் பெரும் திரளான மக்கள் கூடி உற்சாக வரவேற்பு அளித்தனர். அவரது பேச்சு நடைபெறும் இடங்களில் ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர்.

இந்த பிரச்சார கூட்டம் தென் மாவட்டங்களில் தேர்தல் சூழலை மேலும் சூடுபடுத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும் செய்திகள்

33% இடஒதுக்கீடு – பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சி பெண்களின் அரசியல் முன்னேற்றத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்- அன்னபூர்ணா

2 days ago

ஒட்டப்பிடாரம் தொகுதியில் பல்முனைப் போட்டி: களத்தில் முந்துகிறாரா அமமுக வேட்பாளர் சுந்தர்ராஜ்

1 week ago

தூத்துக்குடியில் கீதாஜீவன் தீவிர தேர்தல் பிரச்சாரம் - மக்கள் உற்சாக வரவேற்பு!

1 week ago

தூத்துக்குடியில் அதிமுக தெருமுனை பிரச்சாரம்: “ஆட்சிக்கு வந்தவுடன் ₹10,000 உதவி” – செல்லப்பாண்டியன் உறுதி

1 week ago

தூத்துக்குடியில் தெருமுனை பிரச்சாரத்தில் அதிமுக வேட்பாளர் சி.த. செல்லப்பாண்டியன் கடும் குற்றச்சாட்டு

1 week ago

கோவில் வளாகத்தில் தெருநாய்கள் தொல்லை: ரேபிஸ் நோய் பரவும் அபாயம்! மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க இந்து முன்னணி கோரிக்கை

1 week ago

Share On

தூத்துக்குடியில் புகழ்பெற்ற இடங்கள்

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டை - பாஞ்சாலங்குறிச்சி

வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் - கயத்தாறு

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்

M.G.R. பூங்கா

சிவன் கோவில்

பனிமய மாதா பேராலயம்

SIPCOT

மணப்பாடு தேவாலயம்

தாமிரபரணி நதி

தூத்துக்குடி துறைமுகம்

அருள்மிகு ஞானமூர்த்தீஸ்வரர்